சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து கூறும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.