தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தி வட. மாகாணம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து சமூகங்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது.
அனுராதபுர சிறையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வழக்கு விசாரணைகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறும் அவர்களை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுவருகின்ற நிலையில் நாளை வட. மாகாணத்தில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு சகல தரப்பினரையும் ஆதரவு தெரிவிக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தின் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.