கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்றுடன் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியாருக்கு சொந்தமான குறித்த பேரூந்து ஏற்கனவே விபத்தில் சிக்கிய நிலையில் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்படாதிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பொலிஸாரின் பொறுப்பற்ற தன்மையே விபத்துக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Posts