இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்துள்ளமையை அடுத்தே மேற்படி நடவடிக்கைகைள் கைவிடப்படுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
வைத்திய அதிகாரிகளின் நியமனம் தொடர்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை நீக்குமாறு கூறியே மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.