வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றம்

யாழ். வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருக்கு எதிராக கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேலதிகமாக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டமை, மற்றும் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.

சபையின் மாதாந்த கூட்டத்தின்போது கூட்டமைப்பினராலேயே தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதன்போது தலைவர் அனந்தராஜிற்கு எதிராக 4பேரும், ஆதரவாக 3பேரும் வாக்களித்திருந்த நிலையில் ஈ.பி.டி.பியின் 2 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் மேலதிகமான ஒரு வாக்கினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதேவேளை ஒரு கட்சிக்குள் இருந்து கொண்டு இவ்வாறு ஆளுக்காள் அடித்துக்கொள்வது குறித்து மக்கள் கடும்விசனமடைந்திருக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சபையின் தலைவர் பணம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தே குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமை தாங்கியிருக்கின்றார்.

Related Posts