முகநூலால் முகமுடைந்த அரச ஊழியர்

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த ஆண் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார்.

குறித்த பெண் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக தெரிவித்து போலி முகநூல் ஒன்றில் ஆண் உத்தியோக்தர் தகவல்களை பதிவேற்றியுள்ளார்.

அதில் குறித்த பெண், இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில் நிற்கும் புகைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது, இதனை அவதானித்து ஆத்திரமடைந்த பெண்னே ஊழியரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் குறித்த பெண்ணிடம் வினவிய போது, காணி விடயம் தொடர்பில் இராணுவ சிவில் முகாமுக்கு ஆவணம் ஒன்றை வழங்க சென்றதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் குறித்த உத்யோகத்தரையும் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் இராணுவ முகாமுக்குள் வரவில்லை என்றும் தன்னை தனியாக சென்று வருமாறு கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தான், இராணுவ முகாம் வாயிலில் நின்று காணி ஆவணத்தை வழங்கிய போது அவர் புகைப்படம் எடுத்தாகவும், அதனையே தற்போது முகநூலில் பதிவேற்றியுள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்தார்.

இது தொடர்பில் குறித்த அலுவலக அதிகாரியிடம் முறையிட சென்ற போது அந்த ஊழியருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அதனால் தன்னை பாதுகாத்துக் கொள்ள அவரை தாக்கியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த ஊழியர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Related Posts