அபராதத் தொகையினை இணையத்தளம் மூலம் செலுத்தமுடியும் என்பதுடன், அனுமதிப்பத்திரத்தைப் பொலிஸாரிடம் கையளிக்க வேண்டியதில்லை எனவும் பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
முன்னர் அபராத தொகையை செலுத்திய பின்னரே ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை காவல் நிலையங்களில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் நடைமுறை இருந்தது.
எனினும் குறித்த நடைமுறை சாரதிகளுக்கு மிகவும் அசௌகரியம் என்பதனால் அதனை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மேற்படி நடைமுறைகளை இலகுபடுத்தவது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.