விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் வடக்கின் பல பகுதிகளின் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கருதும் இலங்கை ராணுவம், தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பச்சை புல்மோட்டை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேசங்களில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றில் அகழ்வுப் பணிக்கான அனுமதியும் பெறப்பட்டு நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
முதலில் பச்சை புல்மோட்டை பகுதியில் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், எவ்வித ஆயுதங்களும் கிடைக்கப்பெறவில்லை.
அத்தோடு, இன்று அல்லது நாளை புதுக்குடியிருப்பு பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.