16 வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பயணம்செய்யவுள்ளனர் என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம்தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதுடில்லியில் எதிர்வரும் 8ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காகவே குறித்த குழுவினர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று(28) வடமாகாணசபையின் 106ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோதேமேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதுடில்லி பயணம் செய்யும் இக்குழுவில், மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், பா.டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம், சி.தவராஜா, அ.பரஞ்சோதி, இ.ஆனோல்ட், க.சிவநேசன், சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, பி.சிராய்வா, அ.அஸ்மின், றி.பதியுதீன், கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், து.ரவிகரன், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ் ஆகியோரே இவ்வாறு பயணம் செய்யவுள்ளனர்.