அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை விளக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை விரைவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோடியாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இடைக்கால வரைபை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து அவற்றில் இருக்கக்கூடிய விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் அதேநேரம் அதற்கு முன்னோடியாக பொது அமைப்புக்களைக் கூட்டி நிலைமையை விளக்குவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் பேரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்ற வாரம் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
இவ்வறிக்கையில், ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முன்னுரிமை போன்ற விடயங்களே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தமிழ் மக்களின் 70 ஆண்டு கால போராட்டத்தை பின்தள்ளும் செயற்பாடு எனத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை இதுபற்றிக் கூடி ஆராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.