கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை வழக்கில் இரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் மேரி கம்சிகா கொலை வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பதில் நீதிவான் இ.சபேஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே சம்பவம் இடம்பெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட இரத்த மாதிரியும், சந்தேக நபர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்த மாதிரியின் பரிசோதனை அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த தவணையின் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுகாஸ் ஊர்காவற்துறைப் பொலிஸாரின் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன, எனவே இவ்வழக்கு விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.