அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி சுகாதார வைத்திய பணிமனைக்கான விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர், பிரதி அமைச்சர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிமனையின் பதில் அதிகாரி வைத்தியர் மைதிலி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் இறுதியில் கிளிநொச்சியில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றி நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரைச் சந்தித்தனர்.
குறித்த நியமனம் வழங்குவது மாகாண அமைச்சின் பொறுப்பு எனவும், மத்திய அரசினால் எதுவும் செய்ய முடியாது எனவும், யாழில் மத்திய அமைச்சின் கீழ் உள்ளவர்களிற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.