தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கி தண்டித்துவிட வேண்டுமென்ற நோக்கிலேயே சிறீலங்கா அரசு செயற்படுகின்றது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில் அம்பலப்படுத்தினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் விடையம் 5 இன் கீழ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை.
மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே
இந்த அறிக்கையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
ஐநாவின் விசேட செயற்குழுக்கள், ஐநா உடன்படிக்கைகளை கண்காணிக்கும் அமைப்புகள் மற்றும் விசேட பிரதிநிதிகள் ஆகியோர் தமக்கிடையே ஒருங்கிணைக்கப்பட்ட வினைத்திறனுடைய செய்ற்திட்டமொன்றுடன் சிறிலங்காவை அணுக வேண்டும் என நாம் அவர்களை வேண்டிக்கொள்கிறோம். அல்லாதுவிடின் ஐநா மனித உரிமை பேரவை ஆணையாளர் இந்த அமர்வின் ஆரம்ப உரையில் குறிப்பிட்டிருந்தது போல சிறிலங்கா அரசாங்கமானது தன் மீதான மனித உரிமைக்கடப்பாடுகளுக்கு வெறுமனே பெயரிற்காக செய்யப்படும் நடவடிக்கைகளையே பதிலாக வழங்கும் ஆபத்து இருக்கிறது.
குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் பற்றிய விடயங்களை அணுகும்போது இப்படியான ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை மிகவும் பொருத்தப்பாடுடையாதக அமையும்.
ஐநாவின் 2015 ஆம் ஆண்டு 30/1 தீர்மானத்தின் பிரகாரம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது அதே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் ஆட்களை தடுத்துவைத்திருப்பதையும் அச்சட்டத்தின்கீழ் வழக்குகளை நடாத்துவதையும் தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றது.
இப்படியான தடுப்புகளில் உள்ள ஏறத்தாழ அனைவர் மீதுமுள்ள ஒரேயொரு குற்றச்சான்றானது மிகவும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மட்டுமேயாகும். இவ் ஒப்புதல் வாக்குமூலங்கள் நம்பிக்கையற்ற பலவந்தப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் பெறப்பட்டதன் காரணமாக அநேக சந்தர்ப்பங்களில் எந்தவித வலிதும் அற்றது என விலக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்புபட்ட வழக்குகளை குற்றம் இழைத்ததாக கூறப்படும் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு வெளியேயுள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கு உதாராணமாக திரு.சுலக்ஸன் மற்றும் திரு.திருவருள் ஆகியோரின் வழக்கினைக் குறிப்பிடலாம். (வழக்கு இலக்கம் 2491/2013).
சிறிலங்கா நீதித்துறையானது ஊழல் நிறைந்ததும் கட்டமைப்புசார் சிதைவை கொண்டதும் என்ற குற்றம்சாட்டை ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் சிறிலங்கா மீதான ஐ.நா.ம.உ.அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இவ்வாறான (இட)மாற்றங்கள் மூலம் (போலியாக) சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களினடிப்படையில் சந்தேகநபர்களை திட்டமிட்டு குற்றவாளிகளாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் செயற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதை எவரும் மறுதலிக்கமுடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். அவரது உரையின் முழு வடிவம் கீழே ..