கின்னஸ் சாதனை படைத்த மணமகளுக்கு வந்த சோதனை!

உலகின் நீளமான திருமணச்சேலை எனும் கின்னஸ் சாதனைப் புரிவதற்காக 250 பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) குறித்த திருமண வைபவம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கின்னஸ் சாதனையை இலக்காக்கொண்டு, தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோ மீட்டர் நீளமான திருமணச் சேலையை ஏந்தி நிற்பதற்காக 250 பாடசாலை மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்காக அம்மாணவர்கள் அதிகாலை மூன்று மணியளவிலிருந்து தயார்படுத்தியாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகச் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி மரினி த லிவேரா தெரிவித்துள்ளார்.

Related Posts