சட்டவிரோதமாகப் படகு மூலமாக நியூசிலாந்துக்குச் செல்வதற்காக, இந்தோனேசியாவில் தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்கள், கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களைத் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணை யில் விடுதலை செய்ய மினு வாங்கொடை நீதிவான் நீதிமன்ற நீதிவான் சிலனி சத்துரந்தி உத்தர விட்டார்.
பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த நீதிவான் சந்தேகநபர்களை 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கட்டளையிட்டார்.