நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பணியாற்ற வைத்தியரின்மையினால் நோயாளர் பெரிதும் சிரமம் அடைந்துவருகிறார்கள்.
மேற்படி வைத்தியசாலையை நம்பி 4ஆயிரத்து 600 பேர் உள்ள நிலையில் சீரான வைத்தியரின்மையில் வைத்தியசாலை இயங்கி வருகிறது.
இங்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு வருகை தரும் நோயாளர்கள் வைத்தியரின்மையால் திரும்பிச் செல்கின்றனர்.
இதனால் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுகின்றது.
நெடுந்தீவு மக்கள் இம்மோசமான பிரச்சினை தொடர்பாக எத்தனையோ கூட்டங்கள், ஊர்வலங்கள்,நடத்தியும், மாகாணசபைக்கு மகஜர்கள் கொடுத்தும், இதுவரை எந்தவிதமான காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வடமாகாணசபையின் புதிய சுகாதார அமைச்சர், மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எனியாவது 4ஆயிரத்து 600 உயிர்கள் மீது அக்கறை கொள்வார்களா?