அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய ஊழியர்களை உள்வாங்குவதற்காக நாளை முதல் நேர்முக தேர்வு இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை 7வது நாளாக இன்றும் தொடர்கிறது. மேலும் குறித்த தொழிற்சங்கப் போராட்டத்தில் தொழில்நுட்ப பொறியியலாளர் சங்கம், மின் அத்தியட்சகர் சங்கம் என்பனவும் நேற்று நள்ளிரவு முதல் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தினால் பல பிரதேசங்களில் மின்துண்டிப்பு இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் மின்சாரத்தைத் துண்டிக்கும் வகையில் சிலர் மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
எனவே மின்பிறப்பாக்கிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சு நடவடிக்கை எடுத் துள்ளமை குறிப்பிடத்தக்கது.