முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 1999.09.15 அன்று இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியான 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் பகுதியில், நேற்று (15) அனுஷ்டிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உட்ப்பட 24 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்.
வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், உயிரிழந்த உறவுகளின் உறவினர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு உயிரிழந்த தமது உறவுகளுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.