காட்டை விட்டு வீதிக்கு வரும் யானைகள்! : அச்சத்தில் நெடுங்கேணி பொதுமக்கள்

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக பயணித்தோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நேற்று மாலை முதல் குறித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதாக அவ் வீதி வழியாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக அச்சத்துடனேயே பலரும் அவ்வீதியில் பயணங்களை மேற்கொண்டதாகவும், அப்பகுதியில் தற்போது மாலை நேரங்களில் யானைகள் வீதிக்கு வந்து செல்வது அதிகரித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Posts