முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு, உறுப்பினர்கள் சிலர் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை திட்டம் தொடர்பில் மிக இரகசியம் பேணப்பட்டு நடவடிக்கைகள் பேணப்பட்டுவந்தன. எனினும் பிரேரணைக்கு போதியளவு உறுப்பினர்களின் ஆதரவின்மையால் முதலமைச்சர் சார்பு உறுப்பினர்களின் ஆதரவு கோரப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மூலமே தகவல் வெளிக்கசிந்ததாக தெரியவருகின்றது.

மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை ஒத்திவைப்பதனால், மாகாண சபையில் பிரச்சினையான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை அடிப்படையாக வைத்தே, சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

முதலமைச்சரின் செயற்பாட்டினால், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கமுடியாமல் அவர்கள் இருப்பதாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்ட நிலையிலேயே அவருக்கு எதிராக பிரேரணை கையளிப்பது என முடிவுசெய்யப்பட்டதாக தெரியவருகின்றது.

Related Posts