வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா என்ற அபராதத் தொகையை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஏற்பாடுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
குறித்த அபராதத் தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்களின் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூலிக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் முச்சக்கர வண்டிக்கு டெக்சி மீட்டர் இருத்தல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த அபராதத் தொகை எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.