கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமண வைபவம் ஒன்றில் நேற்று முன்தினமிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற முறுகல்நிலை வாள்வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ஆறுபேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் குறித்த சம்பவம் தொடா்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸாா் மேலும் தொிவித்துள்ளனா்.