கல்வி அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சகோதரரும், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் கல்வி அமைச்சின் பிரதியமைச்சராக மோகன் லால் குரே நியமிக்கப்படவுள்ளார்.
இலங்கையின் கல்வித்துறையில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு தனது சகோதரரும் திறமையுள்ளவருமான சகோதரரை கல்வி அமைச்சராக நியமிப்பதே சிறந்த வழி என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களதும் விரிவுரையாளர்களதும் போராட்டங்கள் உச்ச நிலையை எட்டியுள்ள நிலையில் இந்த அமைச்சு மாற்றம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.