நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் சிறிய காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக மேல், தென், சப்ரகமுவ, மத்திய மலைநாடு மற்றும் வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல் மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடான ஹம்மாந்தோட்டை வரையிலான கடற்பரப்பில் 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் பகுதிகளை பொறுத்தவரையில் மழையுடனான பெய்யும் சந்தர்பங்களில் அலைகள் சற்று மேல் எழக் கூடும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.