வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய பாலைய்யா சுதாகரன் என்பரரே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா நீதிமன்ற பதில் நீதவான் தயாபரன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஓமந்தைப் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்புடைய உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் என நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts