அரசாங்க ஊழியர்களின் வேலை நேரத்தில் சலுகை!

போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தாமதப்படுவதால் அவர்களது வேலை நேரத்தில் சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அலுவலக நேரங்களில் நெகிழ்வுத் தன்மையினைக் கடைப்பிடிக்கும் திட்டம் எதிர்வரும் 18ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் முதலில் அரச திணைக்களங்கள் அதிகளவில் காணப்படும் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்கள் காலை 7.30 மணி முதல் 9.15 வரை எந்த நேரத்திலும் வருகை தர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் சமூகமளித்த நேரத்தில் இருந்து மலை 3.15 தொடக்கம் 5.30 மணி வரையான காலப் பகுதியில் அவர்களது வேலையை நிறைவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஊழியர்கள் காலை 9.15 தொடக்கம் மாலை 3.15 வரையான நேரத்தில் கடமையில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என பொது நிர்வாகச் அமைச்சரின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts