இலங்கை பூராகவும் இலவச Wi-Fi (இணைய வசதி) வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட வளமான நாடு மாநாட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை மேம்படுத்துதல் மற்றும் உறவுகளை வளர்க்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இது விரிவுபடுத்தப்படவுள்ளது.
இலவச Wi-Fi வழங்கும் மண்டலங்களை அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. பொருளாதார டிஜிட்டல் அளவை அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் இணைய வசதி வழங்குவது அவசியம் என்பதால், சந்தை மற்றும் கட்டுப்பாடுகளுக்கான தடைகளை அகற்றுவதற்க்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது