புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பு தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு எப்போது நிறைவேற்றப்படுமென குறிப்பிட முடியாத நிலை உள்ளபோதும், சர்வஜன வாக்கெடுப்பு உள்ளிட்ட விடயங்கள் முறையாக நிறைவேற்றப்படுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது நிலைப்பாடு தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய அரசியயலமைப்பு மீது எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.