பொலிஸ் நிலையங்களுக்கு சாரதிகளின் மதுபோதையை பரிசோதிக்கும் கருவிகள்

மது அருந்திய சாரதிகளின் போதையை பரிசோதிக்கும் 90 ஆயிரம் கருவிகள் நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொளள்ப்படும்.

அவ்வாறான சாரதிகளின் அனுமதி பத்திரங்களை தற்காலிகமாகவேனும் குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related Posts