முறையான அபிவிருத்தி வன்னியில் நடக்கவில்லை; ஜனாதிபதியிடம் முறையீடு

போரால் பாதிக்கப்பட்ட பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அபிவிருத்திப் பணிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை, நிர்வாகக் கட்டமைப்புகளில் போதிய ஆளணி வசதி இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் நெருக்கடிகளையே எதிர்நோக்கி வருகின்றனர்.இவ்வாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தனர்.

நேற்று கிளிநொச்சி, முல்லைத்தீவு  மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட அபிவிருத்தி நிலை குறித்து நேரடியாகத் தெரிவித்தார். குறிப்பாக பாடசாலைகளில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் பிரதேச சபைகளில் நிலவும் ஆளணி, பௌதிக வளப்பற்றாக்குறைகள், திணைக்க ரீதியாக காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகள் காரணமாக மாவட்ட அபிவிருத்தியை சரியாக முன்னெடுக்க முடியாமல் உள்ளது.

இங்குள்ள மக்கள் அனைவரும் போரால் பாதிக்கப்பட்ட நிலையில் மீளக்குடியமர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பொருளாதார, வாழ்வியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலைகளைக் கருத்தில் கொண்டு நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் பாரபட்சம் இன்றி அபிவிருத்தி ஒதுக்கீடுகளை எமது மாவட்டங்களுக்கும் சரியாக  வழங்கவேண்டும். இருக்கக்கூடிய பற்றாக்குறைகளை நீக்கி எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை சரியாக முன்னெடுக்க வசதி செய்ய வேண்டும் எனவும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

Related Posts