அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தம் இன்று வட மாகாண சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விவாதம் இன்று (04) மேற்கொள்ளப்படும் என வட மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் ஆதரவை பெற்றுக் கொடுப்பது கடினம் என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏலவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.