இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி காணப்படுவதாக உலக வர்த்தக ஸ்தாபனம் தொவித்துள்ளது. மொத்தமாக 164 நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி பற்றி உலக வர்த்தக ஸ்தாபனம் கவனம் செலுத்தியிருந்தது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக உள்ளதென ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் தெளிவான வளர்ச்சி தென்படுவதை ஆய்வுகள் புலப்படுத்துவதாக வர்த்தக ஸ்தானத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.