அமைச்சு பதவிக்காக நீதிமன்றம் செல்ல தயார் : டெனிஸ்வரன்

தாம் வகிக்கும் போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சை ஆளுனர் நினைத்தால் போல் சுவிகரிக்க முடியாது என வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் வேண்டு கோளுக்கமைய அவ்வாறு அமைச்சு பதவியை சுவிகரிக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

டெனிஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து விலக்குவதற்கான அனுமதியை கடிதம் ஒன்றின் மூலம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அளுனரிடம் கோரியுள்ளார்.

அந்த கடிதத்தில் டெனிஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறும் அவர் ஆளுனரை கேட்டுள்ளார்.

இந்த பின்னணியில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேக்கு, வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் இன்று முற்பகல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்திலேயே டெனிஸ்வரன் இந்த விடத்தை ஆளுனருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் தமது அமைச்சு பதவியை தக்க வைத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடுவதற்கும் தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முதலமைச்சரின் வேண்டு கோளுக்கிணங்க அமைச்சு பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதனைவிட தன்னையே அந்த பதவிக்கு நியமிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

எனினும் சற்றுமுன்னர் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts