யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினர் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 28 ஆம் முதல், 25 நாட்களுக்கு இடம்பெற்றது.
இதற்மைய நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாதுகாப்பு கடமையில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான இன்றைய வைரவர் உற்சவத்தில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு, ஆலய நிர்வாகத்தினர் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
விசேட பூஜை வழிபாட்டில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை நல்லூர் விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னான்டோவும் நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தார்.