நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு : மனஅழுத்திற்திற்கு ஆளாவதாக சந்தேகநபர் வாக்குமூலம்

தனியறையில் அடைத்து வைத்திருப்பதனால் மன அழுத்திற்திற்கு ஆளாவதாக நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இருந்தபோதும், மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற சம்பவத்தின் போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன உயிரிழந்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை மேற்கொண்ட புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெயந்தன் (வயது 39) என்ற நபர் சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

அவருடன் மதுவருந்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவர் உட்பட பிரதான சந்தேக நபர் ஆகியோர் நேற்று (22) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மேற்படி, வழக்கினை நீதிவான் விசாரணை மேற்கொண்ட போது, பிரதான சந்தேக நபரான செல்வராசா ஜெயந்தன் கையை உயர்த்தி சிறைச்சாலையில் தன்னை தனி அறையில் வைத்திருக்கின்றார்கள்.

அதனால் தான் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக தெரிவித்தார்.

யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts