கலைஞர்களுக்கு உதவி வழங்கும் செயற்றிட்டம் : விண்ணப்பம் கோரல்

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கலைஞர்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, உடுவில் பிரதேச செயலாளர் மதுமதி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச கலாசார அதிகார சபையில் அங்கத்துவமுடைய கலைஞர்கள் 55 வயது முதல் 77 வயதுக்கு உட்பட்டவர்கள் 7,500 ரூபாய்க்கும் குறைவான மாதாந்த வருமானம் பெறுபவர்கள் 15 வருடங்களுக்கும் மேல் கலைப் பணியாற்றிய அரச உதவி இதுவரை பெறாத கலைஞர்கள் குறித்த உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

அலுவலக நேரத்தில், உடுவில் பிரதேச கலாசார அதிகார சபையின் ஒருங்கிணைப்பாளரிடம் விண்ணப்பங்களைப் பெற்றுப் பூரணப்படுத்தி, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts