சைட்டம் மருத்துவ நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றாலும் இன்னும் 300 புதிய மாணவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுமதிக்கவுள்ளதாக சைட்டம் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் நெவில் பர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த 200 மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்கள் 100 பேரும் உள்ளடங்கலாக 300 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில அமைச்சர்கள் இரண்டு பக்கமும் இருந்து கொண்டு அரசை விமர்சிப்பதாகவும் அவ்வாறானவர்களை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தான் கேட்டுக்கொள்வதாகவும் நெவில் பர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.