குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி அறவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பிற்கமைவாக 100 மில்லி லீற்றர் குளிர்பானத்திற்கு சேர்க்க வேண்டிய அதிகூடிய சீனியின் அளவு 6 கிராம் ஆகும்.

அதற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபாய் வரி அறவிட தீர்மானித்துள்ளதாக அமைச்சர மேலும் குறிப்பிட்டார்.

Related Posts