இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சட்டவிரோதமான முறையில் வெவ்வேறு வியாபாரங்களில் ஈடுபட்ட 27 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இரகசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக பட்டதாரி ஒருவரும் அடங்குவதாகவும் சுமார் 19 நபர்கள் குறி பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது