கண்டியில் மரம் நடுகை செய்யும் கோஹ்லியும் அனுஷ்கா ஷர்மாவும்!!!

இலங்கைக்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து தற்போது ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றது.

இந்த நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாலிவூட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து இலங்கையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு அவசியமான மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த செயற்பாட்டுக்காக கண்டியில் அவர்கள் மரக்கன்றுகளை நடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றதோடு பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கனவே அனுஷ்கா ஷர்மா விராட் விளையாடும் போட்டிகளை கண்டுகளிக்க வந்தால் விராட் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்று விடுவார் என ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரினையும் கைப்பற்றிய இந்திய அணி நேற்றைய ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts