இணைய சேவைக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 வீத தொலைத்தொடர்பு வரி வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் குறைக்கப்படும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
அதேவேளை 150 சீசீ இற்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நூற்றுக்கு 90 வீதத்தால் குறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.