வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் : அமைச்சர் கிரியெல்ல

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வவுனியா வளாகத்தின் 25ஆவது வருட நிறைவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தரமுயர்த்துவதற்கு பாடுபட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எந்தவொரு அரசியல் யாப்பையும் தமிழ்த் தரப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையில், தற்போதைய அரசியல் யாப்பை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts