தொடர்ச்சியாக பல தோல்விகளை கண்டுவருகின்றது இலங்கையணி, இதனால் கிரிக்கட்ட சபையின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாங்கள் வெல்லவேண்டுமானால் கிரிக்கட் நிர்வாகத்தில் உள்ளவர்களை மாற்றவேண்டிய தேவை தற்போதுள்ளது. இதனை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின் ஊடகவியளார்களின் கேள்வியின் போதே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிரிக்கட்டுக்கு கெட்ட காலமாக உள்ளது. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறினேன் இந்நிலையேற்படும் என்று. காரணம் தவறானவர்கள் கிரிக்கட் நிருவாகத்தை கையிலெடுத்துள்ளமையால். இந்த போட்டியின் தோல்லியானது நாம் வீரர்கள் மீது பழிசுமத்த முடியாது. எமது வீரர்கள் உளவியல் ரீதிகாக உடைந்துபோயுள்ளனர்.
அவர்களை நாங்கள் உளவியல் ரீதியாக பலப்படுத்தவேண்டும். இவர்களுக்கு சரியான பயிற்சி கொடுக்கப்படுகின்றதா என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஆனாலும் சில காட்டிக்கொடுப்புகள் நடப்பதனால் இந்த விளையாட்டில் எதனையும் எதிர்பார்க்க முடியாதுள்ளது.
எனக்கு தொரியும், கிரிக்கட் சபைத்தலைவர் தெரிவித்திருந்தார் ரவி கருணாநாயக்க அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று. ஆனால் இன்று கிரிக்கட் நிருவாகம் கீழ்நிலைக்கு போயுள்ளது. போட்டிகளில் தொடர் தோல்விகள். இதனால் விளையாட்டுத்துறை அமைச்சர் முதலில் செய்யவேண்டியது கிரிக்கட் நிருவாகத்தை மாற்றவேண்டும்.
சாரியனவர்களின் கைகளில் நிருவாகத்தை ஒப்படைக்கவேண்டும்.குறிப்பாக இந்த அரசாங்கம் வந்த பின் இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை துறந்தார்கள். அவர்கள் தங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதாலேயே பதவிகளை துறந்தார்கள். ஆனால் இன்று கிரிக்கட் கீழ்நிலைகை்கு போய்விட்டது. இதனால் கிரிக்கட் சபைத்தலைவர் அந்தப் பதவியில் இருப்பது நியாயமில்லை.
இன்று முதுகெழும்பு கொண்ட நிருவாகம் இல்லை. இன்று சிறந்த கிரிக்கட்ட தெரிவுக்குழுவும் இல்லை. அவர்களுக்கு இன்று தேவையானது மக்களுடைய விருப்பத்திற்கமைவாக தீர்மானம் மேற்கொள்வதே. ஆனால் அந்த தீர்மானத்தை மேற்கொள்ளமுடியாது.
எமது அரசாங்கமும் மக்களுடைய தீர்மானத்தை எடுக்கப்போய் அதுவும் இல்லாமல் போய்யுள்ளது. நாட்டுக்கு தேவையான முடிவை எடுக்கவேண்டிய நிலையுள்ளது. குறிப்பாக கிரிக்கட் தொடர்பில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளவேண்டும். நாங்கள் அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளோம்.
நாங்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் அரசாங்கம் தவறென்றால் அதைப்பற்றி விமர்சனம் செய்கின்றோம். அதற்காக அரசாங்கத்தில் இருந்து விலகவேண்டியதில்லை. அரசாங்கத்தில் பிழைகள் காணப்பட்டால் அதை விமர்சிப்பதற்கான தைரியம் எமக்கு உண்டு. இந்த அரசாங்கத்தை அவர்களுக்காக உருவாக்கவில்லை.
அரசாங்கத்தில் தவறு ஏற்படுமானால் எங்களுக்கு தெரியவேண்டும் அதைப்பற்றி ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சொல்லலாம். இல்லாவிட்டால் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். இவ்வாறு அமைச்சர் தமது கருத்துக்களை தெரிவித்தார்.