மணற்காட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மணற்காட்டுப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி மணலேற்றிச் சென்ற லொறியின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்பவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.