Ad Widget

குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் இலவசமாக விநியோகம்: ஜனாதிபதி

குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் நாட்டினது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், கூட்டு உரம் தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை எந்தவொரு அரசாங்கமும் தீர்வு காணாத குப்பை பிரச்சினைக்கு இந்த அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது. இனிமேல் ஆட்சிக்குவரும் எந்தவொரு அரசாங்கமும் அதற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையில்லை.

இதற்கான நிலையானதொரு தீர்வை அரசாங்கம் அடுத்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts