வட. மாகாண அமைச்சுப் பதவிகளை பகிர்ந்தளிக்க தீர்மானம்

வட. மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் மற்றும் ரெலோ கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சபை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வட. மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து, இலங்கை தமிழரசு கட்சி வடமாகாண சபையில் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என அறிவித்தது.

எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருடனான சந்திப்பை தொடர்ந்து தமிழரசு கட்சி இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், வட. மாகாண அமைச்சர்களாக இருக்கும் அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts