வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவரனை செஞ்சோலை சிறுவர் இல்ல பிள்ளைகள் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது செஞ்சோலைப் பிள்ளைகளின் தேவைகள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவ்ரன் கேட்டறிந்து கொண்டார்.
வடமாகாண சபையின் 101வது அமர்வைப் பார்வையிட இன்றையதினம் வந்த சிறுவர்கள் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதுடன், தமக்கான தேவைகள் தொடர்பிலும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கல்வி உதவிகள் மற்றும் கல்வி கற்பதற்கான மண்டபம் அமைப்பதற்கான உதவிகளையும் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
பதிலளித்த முதலமைச்சர் கற்றல் செயற்பாட்டிற்கான உதவிகளை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததுடன், தேவைகள் குறித்து தமக்கு எழுத்து மூலம் தருமாறும் உடனடியாக அவற்றினை நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார்.
முதலமைச்சரை சந்தித்த பிள்ளைகள் நல்ல சேவையாற்ற வேண்டுமென்று வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், முதலமைச்சரை பார்ப்பதற்காக ஆவலுடன் வந்ததாகவும் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.
முதலமைச்சருடன் ஒன்று கூடி புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், முதலமைச்சரிடம் ஆசிர்வாதமும் பெற்றுச்சென்றனர்.