சாரதிகள் தவறிழைப்பின் 25,000 ரூபா அபராதம் விதிக்க அனுமதி

வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல் போன்ற தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்க அனுமதி கிட்டியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாத்திலக்க இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார்.

Related Posts