‘எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்` என மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேச சிங்கள கம்மான மக்கள்அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் சிலாவத்துறை பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள வைத்தியசாலையின் தேவைகள், மற்றும் குறைபாடுகள் குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் ராஜித அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுத்த பின்னர் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்திற்கும் சென்றார்.
அங்கு வாழும் சிங்கள மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் நானும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இணைந்து இந்தக் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தர நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் ராஜித செனரத்தன உறுதிமொழி வழங்கினார்.