ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர் தெல்லிப்பளையில் கைது!!

வாள் வெட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர், கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தெல்லிப்பளை பகுதியில் வைத்து நேற்று பொலிஸ் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர்.

இவர் தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஆவா குழுவின் தலைவர் எனக் கருதப்பட்டவர் உள்ளிட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts